IOC தாங்கி உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலகியுள்ளனர்
தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஆதராவாக லங்கா ஐஓசி தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கமும் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகியுள்ளனர்.