துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு
றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கேகாலை நீதவான் நீதிமன்றில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.