நடிகர் விமல் மீது புகார் அளித்த தயாரிப்பாளர் கைது


தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் ஏப்ரல் 22ஆம் தேதி 2022, அன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்திருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகார் மனு நகலை அளித்திருந்தார். அதில் நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று சிங்கார வேலன் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டதாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *