லைக்கா மோபைல் ராஜபக்ஷவின் நிறுவனமா – வெளியான செய்தியால் பரபரப்பு
கோட்டபாய ராஜபக்ஷவின் சொத்துகள் பற்றி தகவல் வெளியிடுவதாக கூறிய ஒரு ஹக்கர், பெரும் பட்டியல் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ராஜபக்ஷர்களுடையது என்று தெரிவிக்க. அதனை கொஞ்சம் கூட ஆராயாமல் சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதில் லைக்கா மோபைல் நிறுவனமும் ராஜபக்ஷவின் நிறுவனம் என்று கூறப்பட்டுள்ளது. சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவர் ஒரு ஈழத் தமிழர். தனது சுய உழைப்பால் முன்னேறி இன்று முன்னணி மோபைல் நிறுவனத்தை, நடத்தி வருகிறார். இன் நிலையில் லைக்கா மோபைல் நிறுவனத்தை ராஜபக்ஷர்கள் சொத்து என்று கூறி, தமிழர் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள் சில சிங்கள இன வாதிகள்.