போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – பாணந்துறையில் பதற்றம்

பாணந்துறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாணந்துறை முச்சக்கர வண்டி சாரதிகள் நேற்று (19) முதல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

மட்டக்களப்பில் கஜேந்திரகுமார் எம்.பியை மறித்து ஆர்ப்பாட்டம்
திம்புலாகல, திவுலபத்தனை கிராமத்திற்கு வந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற [...]

மன்னாரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அச்சத்தில் மக்கள்
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் [...]

இலங்கையில் பலரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை
பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 80 பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை [...]