மருந்து பொருட்கள் இல்லை – சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்
நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் நடைபெறவிருந்த அவசரமில்லாத சத்திர சிகிச்சைகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வைத்தியசாலை கட்டமைப்பில் இல்லாத மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
இதன்போது, 646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.