நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு


உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளையதினம் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

மது அருந்துவதால் இலங்கையில் நாளொன்றுக்கு 50 பேர் வரையில் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மதுபானத்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு மதுவரித் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் பொதுமக்களுக்காகத் செயற்பாட்டில் இருக்கும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *