இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி உயிரிழப்பு

லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.
அதோடு இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது.
தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது.
Related Post

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை [...]

அகதியாக சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தமிழக பொலிஸ்காரர்
இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த போலீஸ்காரரை தற்காலிக பணியிடை நீக்கம் [...]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவு
தமிழ்-சிங்கள புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் நிலையில் பொதுமக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது. [...]