யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.
இறுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அக்னியில் சபதமெடுத்தனர்.
பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related Post

வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல்
வாள் ஒன்றுடன் வீதிக்கு வந்த நபர் ஒருவர் வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் [...]

வவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் [...]

காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு – இருவர் கவலைக்கிடம்
கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக [...]