யாழ் ஊர்காவற்துறையில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்த நபர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது. NSBM பல்கலைக்கழகத்திற்கு [...]

சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு [...]

மட்டு மாவட்டத்தில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள மாணவர்கள்
மட்டு மாவட்டத்தில் மாணவர்களின் போசாக்கு தன்மை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்தாவிடின் [...]