யாழ் தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இவர் புதன்கிழமை இரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றார். பின்னர் வியாழக்கிழமை காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Post

யாழில் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியதால் மின்சாரசபைக்குள் புகுந்து அட்டகாசம்
இலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு அறிவித்தல் (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சாரசபை [...]

யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்ற சங்கத்தின் தலைவர் இறைபதமடைந்தார்
யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தனது 77வது வயதில் [...]

நியூசிலாந்து நோக்கி சென்ற 248 தமிழர்கள் மாயம்
மீன்பிடி இழுவை படகில் நியூசிலாந்தை அடையும் நோக்கில் காணாமல் போன 248 இலங்கை [...]