நடைபெறும் O/L பரீட்சையில் முறைகேடு – CID யில் முறைப்பாடு

நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேர்வு எழுதியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எம்மிடம் தெரிவித்துள்ளார்.
Related Post

தஞ்சம் தேடிச் சென்ற இலங்கையர்களை திரும்பி அனுப்பிய அவுஸ்திரேலியா
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு [...]

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடாவடி
ஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு வந்த அமைச்சர் ஒருவரின் நண்பர்கள் என [...]

யாழ் . கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவர் வெட்டி படுகொலை – மனைவி, மாமன் உள்ளிட்ட 11 பேர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் [...]