யாழ் நாவாந்துறை சந்தையின் அவல நிலை – கண்டுகொள்ளாத மாநகரசபை


யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைத்துள்ள நாவாந்துறை மீன் சந்தையானது யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான மீன்சந்தையாகும் .
இங்கு மரக்கறிகள் விற்பனை நிலையம் இறைச்சி வகைகள் மீன்கள் விற்பனை நிலையம் என பலதரப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகிறது .

அத்தோடு இப்பகுதி அதிகளவான மக்கள் ஒன்று கூடும் சந்தை தொகுதியாகவும் காணப்படுகிறது .

ஆனால் இந்த மீன் சந்தையானது போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி காணப்படுகின்றதாக பிரதேச மக்களும் வியாபாரிகளும் குற்றம் சுமத்தியுள்ளார் .

அத்தோடு இது தொடர்பில் பலமுறை மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் கண்டுகொள்ளாது கடந்து செல்வதாக வியாபாரிகளும் பிரதேச மக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர் .

அத்தோடு மீன் சந்தையில் போதிய சுத்திகரிப்பு மற்றும் கழிவகற்றல் பணிகள் இடம் பெறாமையால் இங்கு துர்நாற்றம் வீசுவதுடன் புளுக்கள் உருவாக்கி விற்பனை நிலையங்களுக்கும் புகுந்துள்ளது . இதனால் பலவகையான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது .

இதன் காரணமாக சந்தைக்கு வாடிக்கையாக வரும் நுகர்வோர் அங்கு செல்வதை தவிர்த்து வருவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர் .

அத்தோடு மாநகர சபையால் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான மலசல கூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் வடிகாலமைப்பு வசதிகள் அத்தனையும் அற்ற நிலையில் இந்த சந்தை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அத்தோடு வியாபாரிகள் தாங்களாக முன்வந்து சந்தைத் தொகுதியை துப்பரவு செய்ய முயற்சித்தாலும் நீரிறைக்கும் இயந்திரம் இன்மையால் துப்பரவு பணிகளை செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே சுத்தப்படுத்தாமல் கைவிடப்பட்ட வடிகாலமைப்புக்களையும் நீர் வசதி மற்றும் மலசல கூட வசதிகளும் உரியமுறையில் கழிவுகளை அகற்றுவதற்கும் ஏற்பாடு செய்து தருமாறு உரிய அதிகாரிகளை சென்றடைய வேண்டும் என ஊடங்கள் வாயிலாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *