யாழில் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் நேற்று இரவு (04.01.2024) வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் முச்சக்கரவண்டி ஒன்றை சேதப்படுத்தியதுடன் நபர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.