இலங்கையில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் உட்பட மூவர் படுகாயம்
ராகம, வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயது இளைஞன் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (14-12-2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்படி, காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 17 வயதுடைய இளைஞரும், பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் வல்பொல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.