யாத்திரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

முறையற்ற விதத்தில் குப்பைகளை போட்டுச் செல்லும் சிவனொளிபாத வழிபாட்டில் ஈடுபடும் யாத்திரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா தெரிவித்தார்.

இவ்வருடம் சிவனொளிபாத யாத்திரை நாளை (07) பௌர்ணமி தினத்திலிருந்து ஆரம்பமாகி அடுத்த வருடம் வெசாக் பௌர்ணமி வரை தொடரும்.

சிவனொளிபாத யாத்திரை காலங்களில் பிரதேசத்தில் ஏற்படும் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா குறிப்பிட்டார்.