யாழில் மரம் முறிந்து ஆலயம் சேதம்


ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் மேற்கு, சங்கானை – வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று நேற்றிரவு தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.

இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது. இதனால்
ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *