நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாட்டைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related Post

பல தடவைகள் மழை பெய்யும்
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை [...]

கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை – மீனவர்களுக்கு அவசர அறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையத்தால் பலத்த காற்று [...]

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் நிலை
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் [...]