சந்தேகத்திற்கிடமான முறையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (01) காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலத்தை பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பொலன்னறுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொதுக்கிணற்றில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.