யாழ் துன்னாலையில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்
யாழ். துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை சுஜீதரன் (வயது-31) என்ற இளைஞரே வாள் வெட்டு காயங்களிற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
முன்பகை காரணமாகவே இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த நெல்லியடிப் பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.