கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சி


கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை இன்றைய முஸ்லிம் தலைவர்களும் கைக்கொண்டு கிழக்கில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தில் மிக கவனமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதி மக்களின் குடிநீரை பூர்த்திசெய்யும் வகையிலான வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்கு என 100மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மைலம்பாவெளி ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் நடைபெற்றது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நீர்வழங்கல் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.

இதன்மூலம் நீண்டகாலமாக குடிநீர் கோரி வந்த இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
தனியாக அபிவிருத்தியை மட்டும் இலக்காக கொண்டு எதனையும் சாதிக்கமுடியாது என்பது எங்களுக்கு தெரியும்.தனியோ உரிமையினை மட்டும் இலக்காக கொண்டு வேலைசெய்யும்போது அபிவிருத்தியை இழந்து நிற்கின்ற சமூகமாக நாங்கள் மாறியிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரைக்கும் தமிழ் சமூகம் தன்ட இருப்பினை பாதுகாத்தக்கொள்ளவேண்டுமானால் உரிமையியும் அபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று முரண்படாத வகையில் சமாந்தரமாக கொண்டுசெல்லவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் மூன்று இனமக்களும் வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தினை எடுத்துப்பார்த்தால் தங்கள் சமூகம் சார்ந்த உரிமைசார்ந்த விடயத்திலும் கவனமாகயிருக்கின்றார்கள், அபிவிருத்தியிலும் கவனமாகயிருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர்,கிழக்கின் பெரும்தலைவராக முஸ்லிம்களால் பார்க்கப்படுகின்றன எம்.எச்.எம்.அஸ்ரப் இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்.

தமிழரசுக்கட்சியின் பேச்சாளராகவும் முக்கிய முஸ்லிம் செயற்பாட்டாளராகவும் இருந்தவர்.பின்னர் அதிலிருந்து வெளியேறி இலங்கை முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார்.

கிழக்கில் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியாக அதனை கொண்டுவந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

அவரது முன்னெடுப்புகள் அவரை தொடர்ந்துவந்த முஸ்லிம் தலைவர்களின் முன்னெடுப்புகள் இன்று கிழக்கில் அவர்களின் இருப்பினை உறுதிப்படுத்துவதில் அவர்களது வேலைத்திட்டங்களை கவனமாக முன்னெடுத்துவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் ஓரு பெரும்பான்மை சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது.58.9வீதம் கிழக்கில் தமிழர்கள் இருந்தார்கள்.

ஆனால் 38.6வீதமாக தமிழர்கள் உள்ளனர்.20வீதத்தால் தமிழர்களின் வீகிதாசாரம் குறைந்துள்ளது.கிழக்கில் தமிழர்கள் பாரிய வீழ்ச்சியாகவே பார்க்கவேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *