மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள்


தமிழ் தேசியக்கட்சி ஒன்றிணைந்த எற்பாட்டில் பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் சுன்னாகம் மத்திய பேரூந்து நிலையம்,சந்தைப்பகுதிகளில் இருந்து ஆரம்பமாகியது

குறித்த நிகழ்வு 09.15 மணியளவில் இடம்பெற்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பேரினவாத அடக்கு முறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கான துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைத்தார்

இதில் வியாபார ஸ்தாபனங்கள், சந்தை நடத்துனர் கள்,வாடிக்கையாளர்கள்,பேரூந்து பயணிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டன

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா கஜதீபன், முன்னாள் சுன்னாக பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்..

பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலி போராட்டம் 04.10.2023 அன்று மருதனார் மடசந்தியில் இருந்து ஆரம்பிக்கப்படும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *