இலங்கையில் நிபா வைரஸ் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிபா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியில் நேற்று (24.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.