சிற்றுண்டியில் பிளாஸ்டிக் முட்டை – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

அளுத்கமவில் பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் மற்றொரு நபருடன் அளுத்கம பிரதேசத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்று 1230 ரூபாய்க்கு முட்டை ரோல்ஸ், பணிஸ் , மீன் ரோல்ஸ் போன்ற சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார்.
இதன் போதே கொள்முதல் செய்யப்பட்ட ரோல்ஸில் முட்டை போன்ற வெள்ளை நிற இறப்பர் போன்ற பொருள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உணவகம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Post

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வேலைநிறுத்தம்
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) [...]

யாழ் வடமராட்சி கிழக்கில் விபத்தில் தந்தை உயிரிழப்பு – மகள் படுகாயம்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் [...]

அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்
செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் [...]