மட்டக்களப்பில் விபத்து – 4 வயது குழந்தை உட்பட இருவர் பலி, பெண் படுகாயம்
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை, வான் சாரதி (54 வயது) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 49 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.