கள்ள தொடர்பால் ஏற்பட்ட வன்மம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றுக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் தந்தை, தாய், மகள் காயமடைந்தனர். சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் கத்தியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். திருமணத்திற்கு புறம்பான உறவால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்