ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்
ரயில் சேவை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாக
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.
எனவே, நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ரயிலில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவர் உயிரிழந்தமைக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர், அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
இதில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவும் கலந்துகொண்டார்.