வேற்றுகிரக வாசிகளின் தோற்றத்தை பெற்ற இளைஞன்


ரஷ்ய இளைஞர் ஒருவர் உயிராபத்தான பிளாஸஸ்ரிக் சத்திர சிகிச்சையின் மூலம் விசித்திரமான உடல் தோற்றத்தை பெற்றுள்ளார்.

வேற்று கிரகவாசிகளை போன்ற தோற்றத்தை பெற வேண்டுமென்பதற்காக இந்த சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

25 வயதான கிரில் தெரேஷின்(Grill Thereshine) என்ற இளைஞன், “சூப்பர்மேன்” தசைகளைப் பெற அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது, ​​​​அவர் இறந்துவிடுவார் என்று வைத்தியர்கள் எச்சரித்தனர்.

என்றாலும், அவர் விடாப்பிடியாக சத்திர சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இதன்போது அவர் “நான் ஒரு அன்னிய முகத்தை உருவாக்க விரும்புகிறேன்.

நான் ஒரு இளைஞனாக வேற்று கிரகவாசிகளின் படங்களை பார்த்ததிலிருந்து வேற்றுகிரகவாசிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அவை இருப்பதாகவும், அவை முழு உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த இனம் என்றும் எனக்குத் தெரியும். நான் அவர்களிடம் செல்வது போல் உணர்கிறேன்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *