கோதுமை மாவின் இறக்குமதி வரி அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறைமை நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ கிராம் ஒன்றுக்கு 16 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன், கோதுமை தானியங்களுக்கு 6 ரூபா வரியும் விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், இறக்குமதி கட்டுப்பாட்டை மாத்திரமே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.