இளைஞன் வீட்டுக்கு சென்ற மாணவி வன்புணர்வு
பதினைந்து வயது மாணவியொருவர் முல்லேரியாவில், முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு அந்த இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்கா நகரப் பகுதியில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அளுத்கம பொலிஸில் மாணவி தனியாக வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும் அவரை தேடித்தருமாறு மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி அளுத்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான இளைஞரும் மாணவியும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் முல்லேரிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.