ஓடும் பேருந்தில் வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம் – இராணுவ கோப்ரல் கைது
கண்டியில் இருந்து தம்புள்ளை சென்ற பேருந்தில் துருக்கி நாட்டு சுற்றுலா பயணியான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இராணுவ கோப்ரல் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (11) தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணிபுரியும் கோப்ரல் எனவும் இவர் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த துருக்கிய பெண் பஸ்ஸில் பயணித்த பயணிகளுக்கு அறிவித்ததையடுத்து, அவர் பிடிக்கப்பட்டு தம்புள்ளை தலைமையக பொலிஸாரிடம் பயணிகளால் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்போது அவர் இராணுவ கோப்ரல் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.