வாகன விபத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்


பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல ஹல்பே பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று ஹாலி எல பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெரிய மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த 52 வயதுடைய நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பெண்கள் இருவரும், இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் பாலித ராஜபக்ஷவிடம் வினவிய போது, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *