இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க அனுமதி
இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முதலீட்டாளர் ஒருவரதும், முதலீட்டுச் சபையினதும் பங்களிப்புடன், பரீட்சார்த்தமாக கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.