கொழும்பில் காணாமல் போன யாழ் இளைஞர் – 7 மாதங்களாக தொடரும் தேடுதல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார்.
இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவிக்கின்றார்.
மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார் எழு மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவாதாக தெரிவித்தார்.
Related Post

யாழில் பாடசாலை மாணவி உயிரிழப்பு
யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உயிரிழந்த [...]

விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு [...]

இலங்கையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிப்பு
2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற [...]