மோச்சா சூறாவளியால் இலங்கைக்கு ஆபத்தா – வெளியான முக்கிய அறிவிப்பு


பங்களாதேஷ் மற்றும் மியான்மரை நோக்கி நகர்வதால் இலங்கையில் மோச்சா சூறாவளியின் தாக்கம் மேலும் குறைவடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த மோச்சா சூறாவளி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இலங்கையை விட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது நாளை நண்பகல் வேளையில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மர் கரையோரங்களை கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்பு காரணமாக, காற்றின் வேகம் மணிக்கு 55-65 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு கடற்பகுதியில் மணிக்கு 75-85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவதானமாக இருக்குமாறு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களும் கோரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *