கொழும்பில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு


நேற்று (12.05.2023) மாலை ஆறு மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடுமுழுவதும் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் ஒருகட்டமாக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள், குற்றவாளிகள், சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான விசேட சுற்றுநிரூபம் பொலிஸ்மா அதிபரால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதும் அதன் ஒருகட்டமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை அடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படக்கூடும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *