நீராடச் சென்ற 19 வயதுடைய இளம் ஜோடி மாயம்

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற போது திருமணம் செய்யவிருந்த ஜோடியொன்று அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் நேற்று (07) வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவருமே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடி வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள், பிரதேசவாசிகள், இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Related Post

சமுர்த்தி கொடுப்பனவுகள் ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம்
திறைசேரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஒரு வாரம் [...]

மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை
எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் [...]

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து – 50 க்கும் மேற்பட்டோா் பலி
நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50 க்கும் மேற்பட்டோா் [...]