ஹட்டனில் ஆலங்கட்டி மழை
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
இந்த ஆலங்கட்டி மழை சுமார் மூன்று நிமிடங்கள் நீடித்ததுடன் அதன் பிறகு கடும் காற்று, இடி மற்றும் மின்னலுடன் கடும் மழை பெய்து வருகின்றது.
ஆலங்கட்டி மழை காரணமாக தரக கூரைகளைக் கொண்ட வீடுகளில் அதிக சத்தம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் அதிக குளிர் நிலவுவதையும் காணக்கூடியதாக உள்ளது.