திருகோணமலையில் இ.போ.ச பேரூந்து மோதி ஒருவர் படுகாயம்
திருகோணமலை நகரின் துறைமுக வீதியில் இ.போ.ச பேரூந்து மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
விபத்து நடந்ததையடுத்து, அப்பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள் பேரூந்தை தாக்கி சேதப்படுத்தினர்.
பேருந்திற்கு தீ வைக்க முயற்சித்ததையடுத்து, அங்கு வந்த பொலிஸார் குழுவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.