விபத்தில் உடல் நசுங்கி பலியான 22 வயது யுவதி
துரதிஷ்டவசமாக கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது காதலனுடன் ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து திரும்பும் போது இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று வரகாபொல உடுவக்க நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பும் போது முந்திரி வாங்குவதற்காக தனது ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளை கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் பட்டலிய கஜுகம என்ற இடத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.
இறந்த பெண் மோட்டார் சைக்கிள் அருகே இருந்த போது, காதலன் முந்திரி கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த இளம்பெண்ணை மோதிய நிலையில் பேருந்து அருகில் இருந்த வடிகாலில் விழுந்து நின்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த பஸ் இராணுவத்திற்கு வாடகைக்கு விடப்பட்டதுடன் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.