நான்காம் மாடியில் இருந்து குதித்து நோயாளி
களுபோவில போதனா வைத்தியசாலையில் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் நான்காம் மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை பதிவாகியுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.
கோனாபொல, கந்தேவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தொண்டையில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மூன்று மாதங்களாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.