யாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழப்பு
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்.பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்ற்ட்ட நிலையில் நேற்று குழந்தை உயிரிழந்துள்ளது. இறப்பு விசாரணையினை தெல்லிப்பழை மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டிருந்தார்.
நிமோனியா காய்ச்சலால் குழந்தை உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.