யாழ் மாநகரசபை ஆணையாளர் பெண் ஒருவருடன் தகாத வார்த்தை பிரயோகம்


யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகஸ்த்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் அரச உத்தியோகத்தரான யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஒருவரின் மகளுடன் பேசிய விடயங்களே இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு திணைக்களம் தொடர்பில் குறித்த பெண் யாழ்.மாநகர ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் ஆணையாளர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதன்போது குறித்த உரையாடல் ஒலிப்பதிவு உயர்மட்டங்களின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *