16 வயது பாடசாலை மாணவன் திடீர் மரணம்

பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை மாணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதுடன், பாணந்துறை பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழ் மக்களிடம் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்
யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என [...]

உயிர் அச்சுறுத்தல் – நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி, குருருந்தூர் விவகாரம்
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் [...]

யாழில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – வலி கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் [...]