வவுனியா குடியிருப்பு பகுதியி குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு
வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலமாக காணப்படுபவர் தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
வவுனியா நகரில் யாசகத்தில் ஈடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமையுடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவானின் விசாரணைகளுக்காக சடலம் குளத்தின் கரைப்பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது.