மாணவர்களுக்கு 11 லட்சம் வட்டியில்லா கடன்


தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு 11 இலட்சம் வட்டியில்லா கடனுதவி வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கேகாலையில் இன்று (17) தெரிவித்தார்.

உயர்தரத்தில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய முடியாத, ஆனால் நிபுணத்துவ அறிவுடன் பட்டம் பெற முயற்சிக்கும் மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபா கடனுதவியும், தனிப்பட்ட செலவுக்காக 11 இலட்சம் ரூபாவும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உலக வேலை சந்தைக்கு ஏற்றது

இக்கடனை பட்டப்படிப்பு முடித்து ஒரு வருடத்தின் பின்னர் திருப்பிச் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *