உதவிக்கு சென்ற பெண் கொலை – தந்தை மற்றும் மகள் படுகாயம்
பொல்பிதிகம நிகதலுபத பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய கத்தி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரும் அவரது மகளும் நபர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலை கட்டுப்படுத்த உயிரிழந்த பெண் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் குறித்த பெண்ணை கூரிய கத்தியொன்றில் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அந்த பெண் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த தந்தை மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.