வயல்வெளியில் பெண்ணின் சடலம் – சந்தேகநபர் கைது

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் உதவியுடன் அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று முன்தினம் (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
Related Post

அலரி மாளிகையில் மது போதையில் ஆளும் கட்சி அமைச்சர்கள்
அலரி மாளிகையில் கடந்த புதன் கிழமை ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் [...]

திருடர்களை துரத்திச் சென்ற இளம் குடும்பஸ்த்தர் குத்திக் கொலை
தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற கட்டிடத்தொழிலாளி ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு [...]

அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளுக்கு ஆதரவு வழங்க தயார் – சஜித்
எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளுக்கு ஆதரவளித்தாலும் நேற்றிரவு நிகழ்த்தப்பட்ட [...]