அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு தடை உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் வளாகம் உள்ளிட்ட பல பெயரிடப்பட்ட இடங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு மேற்படி பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Related Post

உக்கிரமடையும் போருக்கு மத்தியில் இஸ்ரேல் வந்த ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். காசா மீது [...]

7 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு அழைப்பு
7 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. [...]

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் A நோயால் புதிததாக 30 சிறுவர்கள் பலி
பிரித்தானியாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஸ்ட்ரெப் A நோயால் குறைந்தது [...]