வவுனியா- ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

வவுனியா, ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இன்று (26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, ஏ9 வீதி, மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் பயணித்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இ.போ.சபை மற்றும் தனியார் பேருந்து என்பன போட்டிக்கு ஓடியதால் குறித்த விபத்து இடம்பெற்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

மின்மானி வாசிப்பாளர் மீது தாக்குதல்
தமது வீட்டிற்கான இந்த மாத மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி, மின்மானி வாசிப்பாளர் [...]

எதிர்ப்பு பேரணிக்கு இடையூறு செய்த காவல்துறை
குருநாகல் நகரில் சோஷலிச இளைஞர் அமைப்பினால் நேற்று (4) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணிக்கு [...]

குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்கள்
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில், [...]